பொதுமக்களுக்கு "சமூக விரோதிகள்" பட்டம் கொடுக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் !

பொதுவாக ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக அல்லது அமைதியை சீர்குலைக்கும் விதமாக செயல்படுவதை தேச துரோக குற்றம் என்று வரையறுக்கப்படுகிறது. ஆனால், இன்றைய கால கட்டத்தில் சமூக அவலத்தின் மீதான தனது கருத்தை பொது இடத்தில், சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வோரை சமூக விரோதிகள் என்று முத்திரை குத்தி வருகின்றனர் சிலர்.

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து லட்சக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் குத்தித்தனர். இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்த இந்த போராட்டத்தில் சில சமூக விரோதிகள் கலந்துவிட்டதாகவும், போராட்டக் களத்தின் பாதை தவறான வழியில் செல்வதாகவும் கதை கட்டி விட்டனர். இதனால், நம்மவர்கள் பிரம்பு உடையும் அளவுக்கு அடிவாங்கியதும், குடிசைகள், ஆட்டோக்கள் தீ பிடித்து எரிந்ததும் தான் மிச்சம். ஒருவழியாக ஜல்லிக்கட்டு நடத்த சாதகமான தீர்ப்பு வந்தது, வாங்கிய அடி மறந்து மகிழ்ச்சியை கொண்டாட தொடங்கினர் நம் மக்கள்.

ஆனால், இந்த போராட்டம் முற்றுப்பெற்றது தொடங்கி, எங்கு திரும்பினாலும் "சமூக விரோதிகள்", "ஆன்டி- இந்தியன்", "தேச துரோகிகள்" என்ற வார்த்தைகள் மட்டும் காதோடு ஒலித்துக்கொண்டே உள்ளது.

அரசியல்வாதிகள் செய்யும் தவறை சுட்டிக்காட்டினால் "தேச துரோகி", அரசின் ஒரு தவறான திட்டத்திற்கு மாற்றுத் திட்டத்தை பகிர்ந்தால் "ஆன்டி- இந்தியன்", "சமூக விரோதிகள்" என்று இப்படியே நீள்கிறது இந்த பட்டியல். குறிப்பாக "ஆன்டி- இந்தியன்" என்ற வார்த்தை ஒரு அரசியல் கட்சி பிரமுகரின் வாயில் அடிக்கடி வரும் வார்த்தையாகவே மாறிவிட்டது.

அதிகாரிகளும், அமைச்சர்களும் தங்கள் குரலுக்கு செவி சாய்க்காததால் தங்களது ஒவ்வொரு தேவைகளையும் போராட்டங்கள் மூலமாக பெற தொடங்கி விட்டனர் தமிழக மக்கள். தற்போது இதன் விளைவாக, தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைகளை இழுத்து மூட வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று, பின்னர் போராட்டமாக மாறிவருகிறது. திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் என்ற பகுதியில் டாஸ்மாக் கடை வேண்டாம் என்று அகிம்சை முறையில் போராடிய பெண்களுக்கு "ப்பளார்" விழுந்த கதை நமக்கு தெரியும்.!

இதனால், கொதித்தெழுந்த தமிழக மக்கள் அத்துமீறி அமைக்கப்படும் டாஸ்மாக் கடைகளை சூறையாடி வருகின்றனர். ஆங்காங்கே டாஸ்மாக் கடைக்குள் புகுந்து மதுபாட்டில்களை அடித்து நொறுக்கியும் வருகின்றனர்.

மக்களின் கோபத்தின் வெளிப்பாடான இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கத்தினர் கோவையில் "போஸ்ட்டர்"கள் ஒட்டினர். அதில், "பொதுமக்கள் என்ற போர்வையில், டாஸ்மாக் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தும் சமூக விரோதிகளை கைது செய்.!" என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தது. ஆக, இவர்களும் மக்களுக்கு "ஆன்டி-இந்தியன்" படம் கொடுத்துவிட்டனர்.

குடியை கெடுக்கும் மதுக்கடை தங்கள் ஊரில் வேண்டாம் என்ற எண்ணத்திலேயே பொதுமக்கள் போராட்டங்களில் இறங்குகின்றனர். தங்கள் போராட்டத்திற்கு அதிகாரிகள் செவிசாய்க்காத நேரத்தில் போராட்டங்கள் தீவிர நிலையை அடைகின்றன. போராடினால் "அடி" விழும் நிலையில் பொதுமக்களின் நடவடிக்கை வேறு என்னவாக இருந்துவிட முடியும்.

தமிழக மக்கள் வாங்கும் இந்த பட்டங்களையும், படும் துன்பங்களையும் பார்க்கையில், யார் யாருக்கு வேண்டுமானாலும் சமூக விரோதிகள் பட்டம் கொடுக்கலாமா? கருத்துரிமை, பேச்சுரிமை போன்றவை இந்த ஜனநாயக நாட்டில் இல்லையா? என்ற கேள்விகள் அனைவரது மனதிலும் எழுந்து விடுகிறது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...